நட்பு நாடு என சொல்லி வந்த இந்தியாவிற்கு வரியை அதிகரித்துவிட்டு பாகிஸ்தானுடன் தொடர்ந்து கொஞ்சி குலாவி வருகிறது அமெரிக்கா.
முன்னதாக பரஸ்பர வரிவிதிப்பு செய்தபோது இந்தியாவிற்கு முதலில் 25 சதவீதமும், பின்னர் ரஷ்யாவுடனான எண்ணெய் வணிகத்தை கைக்காட்டி 50 சதவீதமும் வரியை அதிகரித்துள்ளது. ஆனால் நேர் எதிராக பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்காவின் நடவடிக்கைகள் சமீபமாக அதிகரித்துள்ளன.
முன்னதாக அமெரிக்கா என்ற பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிருக்கு அங்கு நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பாகிஸ்தானில் கச்சா எண்ணெய் நிலைகளை கண்டறிந்து எடுக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஆசிம் முனிர் அமெரிக்கா சென்றுள்ளார். அதை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தை தொடர்ந்து தாக்கி வரும் பலுசிஸ்தான் விடுதலை படைகள் (Baluch Liberal Army) பயங்கரவாத அமைப்பாக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்தியாவை வஞ்சித்தும், பாகிஸ்தானோடு குழாவியும் வரும் அமெரிக்காவின் செயல்பாடு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K