சீனாவைச் சேர்ந்த ஒருவர் ஒரு பந்தயப் புறாவை ரூ. 14 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளார்.
உலகில் பொதுவாக அனைத்து நாடுகளிலும் பந்தயப் புறாக்களை விடும் பழக்கம் உள்ளத். மாரி 1, மாரி 2 படத்திலும் இதைப் பார்த்திருப்போம்.
இந்நிலையில், பெல்ஜியம் புறா வளர்ப்புக்கு பெயர் போனது ஆகும். பெல்ஜியத்தில் சமீபத்தில் புறா ஏலம் நடைபெற்றது. அதில் இரண்டு வயதுள்ள பெண் புறாவுக்கான ஏலம் ஆன்லைனில் நடத்தப்பட்டது. இதன் ஆரம்பவிலை 200 யூரோவாக நிர்ணயிக்கப்பட்டது.
ஏலம் முடிவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் 16 லட்சம் யூரோக்களுக்கு ஏலம் கேட்டு எல்லோரையும் ஆச்சயத்தில் ஆழ்த்தினார். இந்திய மதிப்பில் ரூ. 14 கோடி ஆகும்.
இந்த இனப்புறாக்களின் ஆண் புறாக்கள் அதிக குஞ்சுக்கள் ஈனும் என்பதால் ஆண்புறாவும் அதிக விலைக்கு ஏலம் போகும் எனக் கூறப்படுகிறது.