Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’’தனுஷ் படப் பாடல் 1 பில்லியன் வியூஸ்’’...யுவனை வாழ்த்திய போனி கபூர் ..டிரெண்டிங்கில் வலிமை

Advertiesment
’’தனுஷ் படப் பாடல் 1 பில்லியன் வியூஸ்’’...யுவனை வாழ்த்திய போனி கபூர் ..டிரெண்டிங்கில் வலிமை
, திங்கள், 16 நவம்பர் 2020 (21:15 IST)
மாரி -2 படத்தில் இடம்பெற்றிருந்த ரவுடி பேபி பாடல் 100 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதனால் இப்பாடலுக்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜாவுக்கு வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் வாழ்த்தியுள்ளார்.

மாரி -2 படத்தில் இடம்பெற்றிருந்த ரவுடி பேபி பாடல் 100 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது. அதாவது தென்னிந்திய சினிமாவில் 1 பில்லியன் பார்வையாளர்களைப் பெற்ற முதல் பாடல் என்ற சாதனை படைத்துள்ளது. இப்படத்திற்கு இசையமைத்தவர் யுவன்சங்கர் ராஜா.
webdunia

இதுகுறித்து மாரி பட நாயகரும் இப்பாடலைப் பாடியவருமான நடிகர் தனுஷ், என்ன ஒரு எதிர்ப்பாரார நிகழ்வு….ரவுடு பேபி பாடல் 1 பில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. அதேநாளில் கொலைவெறி பாடல் உருவாகி 9 ஆண்டுகளாகிறது. ரவுடி பேபி பாடல் தான் தென்னிந்தியாவில் 1 பில்லியன் பார்வையாளர்களைப் பெற முதல் பாடல்.ரசிகர்களுக்கு என் இதயத்திலிருந்து நன்றியைத் தெரிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், இது எனக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. ரவுடி பேபி பாடல் மற்றுமொரு மைல்கல்லாக அமைந்து 1 பில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. எல்லோருக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் வலிமை படத் தயாரிப்பாளர் போனி கபூர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் 1 பில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ள ரவுடி பேபி படாலுக்கு, நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்களில் இசையமைப்பாளராகிய உங்களுக்கு என் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு யுவன் நன்றி தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசன் கட்சி பிரமுகர்....கவிஞர் சிநேகன் கார் விபத்து… போலீஸார் வழக்குப் பதிவு…