Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகருக்கு உதவிக்கரம் நீட்டிய சூரி !

Advertiesment
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகருக்கு உதவிக்கரம் நீட்டிய சூரி !
, திங்கள், 16 நவம்பர் 2020 (21:48 IST)
வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் தவசி புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் சூரி அவருக்கு உதவி செய்யுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் தவசி புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனார். தனக்கு சக நடிகர்கள் உதவ வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இப்படத்தில் நடித்தவர் தவசி. இப்படத்தின் மூலம் புகழ்பெற்றதால் பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.
webdunia

இந்நிலையில் அவருக்குத் திடீரென்று புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தவசி தனக்குச் சக நடிகர்கள் உதவ வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள தவசிக்கு திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ சரவண தனது மருத்துவமனையில் அனுமதித்து இலவசமாக சிகிச்சை அளித்து வந்தார்.

தற்போது, நடிகர் சூரி தவசிக்கு ரூ.20 ஆயிரம் நிதியுதவி அளித்து,அவருடன் மருத்துவமனையில் உள்ள உதவியாளருக்கு தேவையான 3 வேளையும், உணவு வழங்கப்படும் எனவு மேற்கொண்டு உதவியும் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’தனுஷ் படப் பாடல் 1 பில்லியன் வியூஸ்’’...யுவனை வாழ்த்திய போனி கபூர் ..டிரெண்டிங்கில் வலிமை