Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மது போதையில்… நண்பரை மதுபாட்டிலால் அடித்துக் கொன்ற நபர்..…

Advertiesment
போலீஸார் வழக்குப் பதிவு
, திங்கள், 16 நவம்பர் 2020 (21:35 IST)
சென்னை பம்மல் அடுத்த அனகாபுத்தூரைச் சேர்ந்தவர்  வாசுதேவன். இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு அவர் கடந்த 2 நாட்களாக தன் நண்பர்களுடன் இணைந்து தனது வீட்டில் மது அருந்தி வந்துள்ளார். அத்துடன் தனது வீட்டிலும் சச்சரவு செய்துள்ளார்.

அப்போது தனது நண்பர் கோபி என்பவர் என்னை ஏன் இங்கு அழைத்து வந்தாய் எனக் கேட்டு அருகில் அமர்ந்திருந்த மணி என்பவரை மதுபாட்டியால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார் எனக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மணியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வாசுதேவன் உள்ளிட்டவர்களிடன் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்று 1725 பேருக்கு கொரோனா உறுதி !! 17 பேர் பலி