Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தோனேஷியாவில் சேமிப்புக்கிடங்கில் தீவிபத்து..16 பேர் பலி

Advertiesment
INDONESIA
, சனி, 4 மார்ச் 2023 (21:02 IST)
இந்தோனேஷியா நாட்டின் தன்ஹ்மெர்கா பகுதியில் உள்ள எரிபொருள் சேமிப்புக் கிடங்கில் இன்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளில் ஒன்று இந்தோனேஷியா. இந்த நாட்டில் சில நாட்களுக்கு முன்பு நிலநடுக்கம் வந்து மக்களை பீதியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில், அங்குள்ள தெற்கு பபுவா மாகாணம் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசின் சேமிப்புக் கிடங்கு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில், கிடங்கில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமடைந்தன.

இந்த நாட்டின் சுமார் 25%  பொருட்கள் இந்தச் சேமிப்புக் கிடங்கில் இருந்துதான் அனைத்துப் பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த தீ விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த திடீர் தீவிபத்தில் சிக்கி 16 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தீ விபத்து பற்றி போலீஸார் மற்றும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உக்ரைன் நாட்டின் பக்முத் நகரை முற்றுகையிட்ட ரஷிய ராணுவம்