இந்தோனேஷியா நாட்டின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 ஆம் தேதி நில நடுக்கம் ஏற்பட்டது. இதில், துருக்கியில் 10 மாகாணங்களில் கட்டிடங்கள் சரிந்து விழுந்தது. ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆகப் பதிவானதால், உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். பல காயமடைந்துள்ளனர். மீட்பு படைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில், இன்று இந்தோனேஷியா நாட்டின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று காலையில், 6.05 மணிக்கு பெசிசிர் எலாடன் மாவட்டதிதில் இருந்து தென்கிழக்கு பகுதியில், நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவாகியுள்ளது.
இதனால், சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடவில்லை; நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
மேலும், ஜம்பி மாகாணத்திலும் இதேபோல் நிலநடுக்கம் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.