பின்லாந்து நாட்டில் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் மாணவர்கள் உள்பட 27 பேர் காயமடைந்துள்ளனர்.
பின்லாந்து நாட்டின் தலை நகர் ஹெல்சின்சிக்கு வெளியே எஸ்பூ என்ற நகர் உள்ளது. இங்கு மக்கள் நடந்து செல்வதற்காக ஒரு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலம் இன்று திடீரென்று இடிந்து விழுந்தது இதில், சுற்றுலா சென்றுவிட்டு, திரும்பிய 8 ஆம் வகுப்பு மாணவர்கள் உள்பட 27 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்விபத்து பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு பணியாளர்கள் மாணவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தற்போது, காயமடைந்த அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஹெல்சின்கி மருத்துவமனை அதிகாரிகள், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும்படியான பாதிப்புகள் எதுவுமில்லை என்றும், இடிந்து பாலத்தில் மீண்டும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.