Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இம்ரான் கான் கைது செல்லாது: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடி!

imrankhan
, வியாழன், 11 மே 2023 (18:45 IST)
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது கைது செல்லாது என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
 
கடந்த 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்ற இம்ரான் கான் மீது ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான அறக்கட்டளை மூலம் 5,000 கோடி ஊழல் செய்யப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு கூறி அவரை மே ஒன்றாம் தேதி கைது செய்ய உத்தர பிறப்பிக்கப்பட்டது 
 
இந்த கைது நடவடிக்கை காரணமாக பாகிஸ்தானில் பெரும் வன்முறை வெடித்த நிலையில் வன்முறையை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு பிறக்க பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இம்ரான் கானை இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சற்றுமுன் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்
 
இதனை அடுத்து இம்ரான்கான் கைது செல்லாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக அறிவித்ததை அடுத்து அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார்.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு: என்ன காரணம்?