Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உக்ரைன் போன்று பின்லாந்து மீதும் ரஷியா போர் தொடுக்க வாய்ப்பு

உக்ரைன் போன்று பின்லாந்து மீதும் ரஷியா போர் தொடுக்க வாய்ப்பு
, புதன், 5 ஏப்ரல் 2023 (22:11 IST)
ரஷியா, உக்ரைன் மீது போர் நடத்தியது போன்று பின்லாந்து நாட்டின் மீது தொடுக்கலாம் என்பதால் இரு நாடுகளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பு நேட்டோ அமைப்பாகும். இந்த  நேட்டோ கூட்டமைப்பு தான் தற்போது, உக்ரைன் மீதான ரஷிய போரில், உக்ரைனுக்கு  நிதி மற்றும் ஆயுத உதவி செய்து வருகிறது.

இந்த நிலையில், இந்த நேட்டோ கூட்டமைப்பில், ஏற்கனவே பல நாடுகள் இணைந்துள்ள நிலையில், உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்து வரும் பின்லாந்து நாடு இணையவுள்ளது.

மேலும், நாளை பின்லாந்து நாடு நேட்டோ கூட்டமைப்பில் இணையவுள்ளதாக அந்த நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த கூட்டமைப்பில் கடைசி நாடாக துருக்கி இணைந்திருந்த நிலையில் நாளை நேட்டோ அலுவலகத்தில் பின்லாந்து நாட்டின் கொடி ஏற்றப்பட்டவுள்ளது. இந்த  நிகழ்ச்சியில், அந்த நாட்டு அதிபர் செளலி நினிஸ்டோ, பாதுகாப்பு அமைச்சர் கைகொனென், வெளியுறவு அமைச்சர்   ஹாவிஸ்டோ ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

உக்ரைனுக்கு அதிக ஆதரவளிக்க நேட்டோவை வலியுறுத்துவதாக பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார்.

இந்த நிலையில், பெல்ஜியம் தலைநகர் பிரெஸ்செல்சில் நடைபெற்ற விழாவில், நேட்டோ கூட்டமைப்பில் 31 வது உறுப்பு நாடாக பின்லாந்து இணைவதற்கான கையொப்பமிட்டது பின்லாந்து.

இந்த நிலையில், ரஷியாவுடன், பின்லாந்து நாடு 1340 கிமீ கிழக்கு எல்லையைப் பகிர்ந்துகொண்டுள்ளது. தற்போது பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்துள்ளதால், நேட்டோ படைகள் ரஷியா எல்லையில் வரலாம். இது ரஷியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

பின்லாந்து,  நேட்டோவில் இணைந்ததற்கு ரஷியா எதிர்ப்பு கூறி வரும் நிலையில், ரஷியா, உக்ரைன் மீது போர் நடத்தியது போன்று பின்லாந்து நாட்டின் மீது தொடுக்கலாம் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விடுதலை படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரமாக வரும் பெருமாள் வாத்தியார் யார்?