Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரான்ஸின் புதிய பிரதமராக பதவியேற்கும் 34 வயது கேப்ரியல் அட்டல்

Gabriel Atal

Sinoj

, செவ்வாய், 9 ஜனவரி 2024 (19:19 IST)
பிரான்ஸ் நாட்டின் பிரதமராக இருந்த எலிசபெத் போர்ன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் கடந்த 20222 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற இம்மானுவேல் மேக்ரான் 2வது முறையாக பதவியேற்றார்.

ஆனால், பிரான்ஸ் அரசு கொண்டு வந்த ஓய்வூதிய கொள்கைகள், குடியேற்ற சட்டங்கள் மற்றும் அதிபர் மேக்ரானுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர்.

இடைத்தேர்தலிலும் மேக்ரான் அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது.  எனவே பிரான்ஸ் அமைச்சரவையில் மேக்ரான் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, அந்த நாட்டின் பிரதமர் எலிசபெத் போர்ன்( 62) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்த இலையில், பிரான்ஸின் அடுத்த பிரதமராக அந்த நாட்டின் கல்வி மந்திரி கேப்ரியல்( 34வயது)  அட்டல் நியமிக்கப்பட உள்ளளதாக தகவல் வெளியாகிறது.

இவர் பிரதமராக நியமிக்கப்பட்டால் குறைந்த வயதில் பிரதமர் பதவியில் நியமிக்கப்பட்டவர் என்ற சிறப்பை அடைவார்.

இவர் தன்னை ஒரு தன்பாலியன் ஈர்ப்பாளர் என்று அறிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மால்கள், உணவகங்களில் ராமர் கோயிலின் மாதிரியை நிறுவுமாறு மிரட்டிய இந்தூர் மேயர்