Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2700 கோடிக்கு ஒப்பந்தம் செய்ய வந்த நிறுவனத்தை நிராகரித்த எம்பாப்பே!

Advertiesment
Mbappe 1
, வியாழன், 27 ஜூலை 2023 (14:09 IST)
சர்வதேச கால்பந்து போட்டியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் எம்பாப்பே திறமையாக விளையாடி வருகிறார். இவர் , மெஸ்ஸி, ரொனால்டோ,  நெய்மர் ஆகியோரை அடுத்து அடுத்த தலைமுறை நட்சத்திர கால்பந்தாட்ட ஆட்டக்காரராக உலகம் முழுவதும் அறியப்படுகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற  உலகக்கோப்பையில் 8  கோல்கள்  அடித்து கோல்டன் பூட் விருதையும் அவர் கைப்பற்றினார்.  தற்போதைய கால்பந்து வீரர்களில் அதிக மதிப்பு மிக்க வீரர்களில் முதலிடத்தில்  எம்பாப்பே உள்ளார்.

ஆசிய சுற்றுப் பயணத்திற்கான பிஎஸ்ஜி கிளப் அணியில் எம்பாப்பே இடம்பெறாத நிலையில், அவர் அணிமாறலாம் என தகவல் வெளியானது.

இந்த நிலையில், சவூதியில் உள்ள அல் ஹிலால் கிளப் அணி ரூ.2700 கோடிக்கு எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்துள்ளதாக உறுதியற்ற  தகவல்கள்  வெளியானது.

இந்த  ஒப்பந்தம் பற்றிய அதிகாரப்பூர்வ  உலகளவில் அதிக தொகைக்கு ஒப்பந்தமாகும் வீரர் என்ற சாதனையை அவர் படைக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், அல் ஹிலால் கிளப் அணி நிர்வாகிகளை அவர் சந்திக்காமல் புறக்கணித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் ( பிஎஸ்ஜி) அணிக்காக எம்பாபே விளையாடி வரும் நிலையில், இதுவரை 176 போட்டிகளில் விளையாடி, 148 கோல்கள் அடித்துள்ளார்.

இன்னும் இரண்டு ஆண்டுகள் பிஎஸ்ஜி அணியுடனான அவரது ஒப்பந்தம் உள்ள நிலையில், மேலும் ஓராண்டு அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்க பிஎஸ்ஜி அணி விரும்பியது.

ஆனால், எம்பாப்பே ரியல் மாட்ரிட் அணிக்குச் செல்ல விரும்புவதாகவும், அதனால் பிஎஸ்ஜி அணியுடனாக ஒப்பந்ததை அவர் நீட்டிக்கவில்லை என்றும் பிரீ டிரான்ஸ்பர் முறையில் ரியல்  மாட்ரிட் அணிக்கு அவர் செல்லவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் இன்று தொடக்கம்… தொடரை வெல்லுமா ஆஸி?