Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துபாயில் இருந்து 303 இந்தியர்கள் கடத்தப்பட்டார்களா? பிரான்ஸில் தரையிறங்கிய விமானம்..!

Advertiesment
Flight
, திங்கள், 25 டிசம்பர் 2023 (07:18 IST)
துபாயில் இருந்து 303 இந்தியர்களுடன் நிகரகுவா நாட்டுக்கு சென்ற விமானம் பிரான்ஸில் தரையிறங்கிய சம்பவத்தில் சில அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது,
 
துபாயில் இருந்து தனியார் விமானத்தை வாடகைக்கு எடுத்த விமானம் ஒன்று நிகரகுவா சென்று, அங்கிருந்து அமெரிக்கா, கனடா செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது
 
ஆனால் திடீரென vஇமானம் பிரான்ஸ் எல்லைப்பகுதியில பறந்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும்,  விமானம் தரையிறக்க அந்நாட்டிடம் அனுமதி கோரப்பட்டதாகவும், இதையடுத்து, விமானம் இறங்க அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
 
இந்த நிலையில் தாங்கள் மனித கடத்தல் கும்பலால் அவதிக்குள்ளாகி உள்ளாகியுள்ளதாக விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, விமானத்தை பிரான்ஸ் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
 
சோதனையில் விமானத்தில் பயணம் செய்த இந்தியர்களில் சிலர் தமிழ் பேசுவதாகவும்,
பெரும்பாலானோர் இந்தி பேசுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 303 பேரில் 2 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை வருகிறது. முதற்கட்ட விசாரணையில் விமானத்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் இந்தியர்கள் என தெரிய வந்துள்ளது. அதிலும் குஜராத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் உள்ளனர். ஒரே நேரத்தில் 303 பேர் ஒரே விமானத்தில் வந்ததன் நோக்கம் என்ன? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது!
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தந்தை பெரியாரின் பெயரை கேட்டாலே பயப்படுகிறார்கள்: கி.வீரமணி பேச்சு