Publish Date: Sat, 14 May 2022 (13:00 IST)
Updated Date: Sat, 14 May 2022 (15:37 IST)
வடகொரியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மர்ம காய்ச்சலுக்கு 21 பேர் உயிரிழந்து உள்ளனர் என தகவல்.
வட கொரியா நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் மர்மமாக இருக்கும் நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட போதிலும் வடகொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டது.
சமீபத்தில் வடகொரியாவில் முதல் முதலாக ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் என்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து அந்நாட்டின் அதிபர் கிம், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தினார். இந்த நிலையில் முதல் முறையாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர் பலியாகி உள்ளதாக வெளிவந்த தகவலால் வடகொரியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்நாட்டில் ஏப்ரல் இறுதி வரையில், மர்ம காய்ச்சல் நாடு முழுவதும் பரவியுள்ளது என வடகொரியா தெரிவித்து உள்ளது. இதற்கு 3,50,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வடகொரியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மர்ம காய்ச்சலுக்கு 21 பேர் உயிரிழந்து உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.