Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீனாவில் கைக்கொடுக்காத ஊரடங்கு... கைமீறும் மரண எண்ணிக்கை!

Advertiesment
சீனாவில் கைக்கொடுக்காத ஊரடங்கு... கைமீறும் மரண எண்ணிக்கை!
, திங்கள், 25 ஏப்ரல் 2022 (11:23 IST)
சீனாவின் மிகப்பெரும் வர்த்தக நகரமான ஷாங்காயில் கொரோனா காரணமாக பல பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டும் மரணங்கள் அதிகரிப்பு. 

 
உலகம் முழுவதும் கடந்த 2019 இறுதி முதலாக கொரோனா பாதிப்புகள் பரவ தொடங்கிய நிலையில் தற்போது வரை பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர். அவ்வபோது கொரோனா குறைந்தாலும் மீண்டும் புதிய அலைகள் தோன்றுவதால் மீண்டும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.
 
சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்திருந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் சீனாவின் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவின் மிகப்பெரும் வர்த்தக நகரமான ஷாங்காயில் கொரோனா காரணமாக பல பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
 
ஆம், சீனாவின் பொருளாதார தலைநகர் என்ற பெருமைக்குரிய ஷாங்காய் நகரில்தான் அறிகுறியற்ற கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இந்த நகரம் கொரோனா தொற்றின் மையமாக உள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 39 பேர் பலியாகியுள்ளனர்.
கிளஸ்டர் என்று அழைக்கப்படுகிற அளவில் கொத்து கொத்தாக கொரோனா பரவல் மாறி விடாமல் இருக்க சீன அரசு மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகலாய ஆட்சியின் பாடங்கள் நீக்கம்: வைகோ கண்டனம்!