தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆய்வு நடத்தினர்.
டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள 4 மாடி கட்டிடம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஒரு சிலர் காயமடைந்துள்ளதாகவும் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் டெல்லி வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தீ விபத்து தொடர்பாக நீதி விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆய்வு நடத்தினர். பின்னர் பேசிய மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.