இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 18 வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களது நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டனர் என்றும் டெல்லி காவல்துறை உயர் அதிகாரி ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதும், தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சமீபத்தில் டெல்லியில் சட்டவிரோதமாக தங்கிய 21 வங்கதேசத்தினர் பிடிபட்டபோது, அவர்களில் 18 பேர் நாடு கடத்தப்பட்டு உள்ளதாகவும், ஒரு சிறுவன் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பாஸ்போர்ட் மற்றும் இந்திய அடையாள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், இந்த மூன்று பேரில் இருவர் 20 ஆண்டுகளுக்கு முன்பே சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியதாகவும் கூறப்படுகிறது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.