Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சரத்குமார் வாகனத்திலிருந்து ரூ.9 லட்சம் பறிமுதல் : தேர்தல் ஆணையம் அதிரடி

Advertiesment
Sarathkumar
, சனி, 7 மே 2016 (11:40 IST)
சமத்துவமக்கள் கட்சி தலைவரும், திருச்செந்தூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளருமான சரத்குமாரின் தேர்தல் வாகனத்திலிருந்து, தேர்தல் ஆணையம் ரூ.9 லட்சம் பறிமுதல் செய்த விவகாரம் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.


 

 
இந்த சட்டசபை தேர்தலிலும் நடிகர் சரத்குமார் அதிமுக கூட்டணியிலேயே நீடிக்கிறார். அதனால், அவர் அதிமுகவிற்கு ஆதரவாக தமிழகமெங்கும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
 
இந்நிலையில் நல்லூர் விலக்கு பகுதியில், இன்று அதிகாலை, பறக்கும் படையினர் சோதனை செய்தபோது, சரத்குமாரின் வாகனத்தில் இருந்து ரூ.9 லட்சம் சிக்கியது. அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் காட்டப்படவில்லை. எனவே அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தார்கள்.
 
அந்த பணம் வாக்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பணமா என அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த விவகாரம் அதிமுக வேட்பாளர்களிடையே பீதியை கிளப்பியிருக்கிறது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரத்குமார் காரில் இருந்து பணம் பறிமுதல் - தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை