Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சரத்குமார் காரில் இருந்து பணம் பறிமுதல் - தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை

Advertiesment
சரத்குமார்
, சனி, 7 மே 2016 (11:34 IST)
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரின் காரில் இருந்து 9 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 

 
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த நல்லூரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் வள்ளிக்கண்ணு தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
 
அப்போது அவ்வழியாக வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் காரை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணமின்றி 9 லட்சம் ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அனைத்தையும் திருச்செந்தூர் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவமனையில் அனாதையாக சுற்றித்திரிந்த 2 வயது சிறுவன்