Publish Date: Thu, 05 Mar 2026 (10:56 IST)
Updated Date: Thu, 05 Mar 2026 (10:59 IST)
தொழிலதிபரும் நடிகருமான லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள 'லீடர்' திரைப்படத்தின் டீஸர் வெளியானது.
தனது முதல் படமான 'தி லெஜெண்ட்' எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், இந்த முறை ஒரு தரமான வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என்பதில் லெஜெண்ட் சரவணன் மிகவும் கவனமாகச் செயல்பட்டுள்ளார். அதற்கேற்ப, தமிழ் சினிமாவில் தற்போதைய 'சக்சஸ்ஃபுல்' இயக்குநர்களில் ஒருவரான துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். 'எதிர் நீச்சல்', 'காக்கி சட்டை' மற்றும் சமீபத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 'கருடன்' ஆகிய படங்களை இயக்கியவர் என்பதால், 'லீடர்' படத்தின் மீது கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் லீடர் படத்தின் டீஸர் இன்று வெளியானது.