விஜய் நடித்த கடைசிப் படம் என்று கூறப்படும் 'ஜனநாயகம்' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில், அதே நாளில் லெஜெண்ட் சரவணன் நடிக்கும் படமும் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது கார்த்தியின் 'சர்தார் 2' படமும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே விஜய் நடித்த 'பிகில்' மற்றும் கார்த்தி நடித்த 'கைதி' ஆகிய இரண்டு திரைப்படங்கள் 2019 ஆம் ஆண்டு தீபாவளி அன்று மோதிய நிலையில், அதன் பிறகு தற்போதுதான் மீண்டும் விஜய், கார்த்தி படங்கள் மோதுகின்றன என்று கூறப்படுகிறது.
முதலில் 'சர்தார் 2' திரைப்படத்தை தீபாவளி அன்று வெளியிட திட்டமிடப்பட்டதாகவும், ஆனால் தீபாவளி அன்று கார்த்தியின் அண்ணன் சூர்யாவின் 'கருப்பு' படம் வெளியாவதால், சர்தார் 2 படத்தின் வெளியீட்டு தேதி மாற்றியமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எனவே, அடுத்த பொங்கலுக்கு விஜய், கார்த்தி மற்றும் லெஜெண்ட் சரவணன் ஆகியோர் நடித்த மூன்று பெரிய படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.