Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அண்ணாச்சிக்கு இந்த முறை ஹீட்டு கன்பார்ம்!.. லீடர் கிளிம்ப்ஸ் வீடியோ எப்படி இருக்கு?..

Advertiesment
leader

Mahendran

, புதன், 4 பிப்ரவரி 2026 (18:49 IST)
தமிழகத்தில் பல இடங்களிலும் கிளைகள் கொண்ட சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சரவணன்.. துவக்கத்தில் விளம்பர படங்களில் நடித்த சரவணன் லெஜன்ட் திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார். அந்த படம் அவருக்கு ஹிட் படமாக அமையவில்லை.. அதோடு அவரைக் காட்டிய விதமும் சரியில்லை என விமர்சனங்கள் இருந்தது.

இந்த படம் வெளியாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் எதிர் நீச்சல், கொடி, கருடன் ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் அண்ணாச்சி சரவணன் நடித்துள்ள லீடர் படம் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது..

கடத்தலுக்கு தொடர்பான ஆறு கண்டெய்னர்களை அண்ணாச்சி சரவணன் பிடித்து அதை காலி செய்வது போல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. மேலும் அதில் அதிரடியான ஆக்சன் காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது..

ஓவர் பில்டப் எதுவும் செய்யாமல், அவரை தூக்கி வைத்து வசனம் பேசாமல் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார் அண்ணாச்சி சரவணன். கிளிம்ப்ஸ் வீடியோவை பார்க்கும்போது கண்டிப்பாக லீடர் திரைப்படம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது..




Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Sweety Naughty Crazy: ஒரே கில்மா சீனா இருக்கே!.. ஆண்டி வெறியன்ஸை சூடேத்தும் டிரெய்லர்!...