Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் படம்… ஷூட்டிங் எப்போது?

Advertiesment
யோகி பாபு

vinoth

, வெள்ளி, 30 மே 2025 (14:50 IST)
தமிழ் சினிமா உலகுக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி ஏராளமானக் கலைஞர்களை வழங்கியுள்ளது. அப்படி நகைச்சுவை நடிகராக தற்போது முன்னணியில் இருப்பவர் யோகி பாபு. அண்மை காலமாக தமிழில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு அனைத்துப் படங்களிலும் அவர் இருக்கிறார்.

நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் கதையின் நாயகனாகவும் அவர் நடித்த தர்மபிரபு மற்றும் மண்டேலா ஆகிய படங்கள் வெற்றியடைந்தன. ஆனாலும் தொடர்ந்து காமெடி வேடங்களிலும் அவர் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நகைச்சுவை வேடத்தில் நடித்த ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனால் யோகி பாபு பெயர் இருந்தால் படம் விற்பனை ஆகும் என்ற ஒரு பெயரை உருவாக்கி வைத்துள்ளார். ஆனால் அவரின் நகைச்சுவைகள் எல்லா படத்திலும் ஒரே மாதிரி இருப்பதாகவும் அவர் ‘க்ளிஷே’ ஆகிவிட்டார் என்றும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

இந்நிலையில் ரவி மோகன் இயக்கும் படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்தே தகவல்கள் வெளியாகி வந்தன. அதுபற்றி பேசியுள்ள யோகிபாபு “ரவி மோகன் சார் ரொம்ப நல்லவர். என்னை ஆரம்பத்தில் இருந்தே ஒரே மாதிரிதான் நடத்தி வருகிறார். அவர் இயக்கும் காமெடிக் கதையில் என்னைக் கதாநாயகனாக நடிக்கவைக்க முடிவு செய்துள்ளார். ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் அந்த படத்தின் ஷூட் தொடங்கும்” எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாங்கள் நிறைய ஜானர்களை விவாதித்தோம்… ஆனா கமல் சார் சொன்னது இதுதான் –அன்பறிவ் இயக்குனர்கள் பகிர்வு!