Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனி ஒருவன் 2 என்னாச்சு?... சிம்புவோடு கைகோர்க்கும் மோகன் ராஜா!

Advertiesment
தனி ஒருவன் 2

vinoth

, வெள்ளி, 30 மே 2025 (09:00 IST)
2015 ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் திரைப்படம் ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் முக்கியமானதொரு படமாக அமைந்தது. தொடர்ந்து ரீமேக் படங்களாக இயக்கி வந்த ஜெயம் ராஜாவின் முதல் சொந்தக் கதை இந்த திரைப்படம். இந்த படத்தில் ஜெயம் ரவியின் கதாபாத்திரத்துக்கு இணையாக வில்லனாக நடித்த அரவிந்த் சாமியின் கதாபாத்திரமும் ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டது.

இதையடுத்து இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பு வீடியோ சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. ஆனால் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்கான காரணம் படத்தின் பட்ஜெட்தான் என சொல்லப்படுகிறது. படத்தின் பட்ஜெட் 120 கோடி ரூபாய் என்று இயக்குனர் மோகன் ராஜா அறிவித்தாராம். இதைக் கேட்டு தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியாகிவிட்டதாம். ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜா ஆகியோரின் தற்போதைய மார்க்கெட்டின் படி இந்த தொகையில் படம் எடுத்தால் கண்டிப்பாக மிகப்பெரிய நஷ்டம் வரும் என்பதால் இப்போதைக்கு படத்தை தள்ளிவைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மோகன் ராஜா இப்போது சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கப் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக இருவரும் சமீபத்தில் சந்தித்து பேசியுள்ளதாகவும், ராஜா சொன்ன கதை சிம்புவுக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோல்டன் நேரத்தை நாங்கள் மிஸ் செய்துவிட்டோம்… நடிகர் ராஜேஷ் மறைவு குறித்து அவரது தம்பி ஆதங்கம்!