Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அட்லி ஷாருக்கான் படத்தின் புதிய அப்டேட்டைக் கொடுத்த யோகி பாபு!

அட்லி ஷாருக்கான் படத்தின் புதிய அப்டேட்டைக் கொடுத்த யோகி பாபு!
, வியாழன், 5 மே 2022 (09:25 IST)
நடிகர் யோகி பாபு நடிக்கும் ஷாருக் கான் படத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி.

இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த பட படப்பிடிப்புத் தளத்தில் தமிழ் நகைச்சுவை நடிகர் யோகி பாபு, இருக்கும் புகைப்படத்தை இப்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே யோகி பாபு, அந்த படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளியாகி வந்தன.

இந்நிலையில் இப்போது யோகி பாபுவிடம் ரசிகர் ஒருவர், டிவிட்டரில் “நீங்கள் ஷாருக்கான் படத்தில் இருக்கிறீர்களா?” எனக் கேள்வியெழுப்ப, அதற்கு யோகி பாபு “ஆமாம்” எனக் கூறியுள்ளார். இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக அந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் தேவரகொண்டா- மைக் டைசன் நடித்த ‘லைகர்’ படத்தின் அடுத்த அப்டெட்… வைரல் போஸ்டர்!