Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

”கான் நடிகர்களின் படங்களில் நடிப்பதை மறுத்தேன்”… திரைப்பயணம் குறித்து கங்கனா!

Advertiesment
”கான் நடிகர்களின் படங்களில் நடிப்பதை மறுத்தேன்”… திரைப்பயணம் குறித்து கங்கனா!
, செவ்வாய், 3 மே 2022 (08:57 IST)
நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை மறுத்தது பற்றி கூறியுள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வரும் கங்கனா ரனாவத் தமிழில் சமீபத்தில் வெளியான தலைவி படத்தின் மூலம் பிரபலமனார். இவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றவர். ஆனால் வாயைத் திறந்தாலே சர்ச்சைதான். பாஜக மற்றும் இந்துத்வா அமைப்புகளின் தீவிர ஆதரவாளரான இவர் காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்வது வாடிக்கை. அதுபோலவே பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் அனைவர் குறித்தும் கடுமையான விமர்சனங்களை அவ்வப்போது வைத்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் “ ஆண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட பல படங்களில் நடிக்க நான் மறுத்துள்ளேன். இதில் கான் மற்றும் குமார் நடிகர்களின் படங்களும் அடங்கும். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பது எனது நோக்கமாக இருந்தது. அது சாத்தியமாகி உள்ளது. ஸ்டார் நடிகர்களுடன் ஒப்பிடும்போது எனக்கு சம்பளத்தில் பெரிய குறை எதுவும் இல்லை. என்னுடைய இந்த பயணத்தில் நிறைய ஆண்கள் எனக்கு உதவி செய்துள்ளார்கள்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆக்‌ஷனில் இறங்கிய அமலா பால்… புதிய படத்தின் வைரல் போஸ்டர்!