பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா அளித்த திருமண மோசடி மற்றும் பாலியல் புகார்கள் தொடர்பாக, சென்னை மகளிர் ஆணையத்தில் விசாரணை நடைபெற்றது.
	 
	ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதாக ஜாய் கிரிசில்டா புகார் அளித்துள்ளார். மகளிர் ஆணையத்தில் இருவரும் நேருக்கு நேர் அமரவைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
	 
	தனது புகாரில் காவல்துறை நடவடிக்கை எடுக்காததற்கு 'அரசியல் தலையீடு' தான் காரணம் என்று ஜாய் கிரிசில்டா குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் நவம்பர் 1ஆம் தேதி ஆஜராகுமாறு இருவருக்கும் மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
	 
	இதற்கிடையே, ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி, சட்டப்படி உரிமை கோருவதில் உறுதியாக இருப்பதாக மறைமுகமாக இன்ஸ்டாகிராமில் கருத்து தெரிவித்திருந்தார்.