Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கணவருக்கு ஆதரவாக பதிவிட்ட மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி!

Advertiesment
Madampatti Rangaraj

vinoth

, திங்கள், 27 அக்டோபர் 2025 (13:14 IST)
திரைப்பட நடிகராகவும், சமையற் கலைஞராகவும் அறியப்படுபவர் மாதம்பட்டி ரங்கராஜ். ஜாய் கிரிசில்டா என்பவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ரங்கராஜுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியதாக சொல்லப்படுகிறது. ரங்கராஜ் ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் தன்னை திருமணம் செய்துகொண்டு தற்போது ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா புகார் தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பினார். தனது குழந்தைக்கு நீதி வேண்டும் என்றும் சமூகவலைதளங்களில் பதிவு செய்து வருகிறார். இது சம்மந்தமாக அவர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் ரங்கராஜின் மனைவி ஸ்ருதி தற்போது கணவருக்கு ஆதரவாக பேசத் தொடங்கியுள்ளார். மகளிர் ஆணையம் மாதம்பட்டி ரங்கராஜை விசாரிக்க அழைத்தபோது அவருடன் சேர்ந்து வந்தார் ஸ்ருதி. இப்போது “என் மீது கரிசனம் காட்டியவர்களுக்கு நன்றி. நானும் என் குழந்தையும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தெரியாமல் பலரும் விமர்சிக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவருக்கும் மரியாதையுடன் பதிலளிக்க எனது அறிவு முதிர்ச்சிக் கற்றுக் கொடுத்துள்ளது.

எல்லாக் குடும்பத்திற்கும் இதுபோல உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் பிரச்சனைகள் வரதான் செய்யும். அவற்றை ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும். தங்கள் கணவருக்காகப் போராடும் அனைத்துப் பெண்களுக்கும் என் ஆதரவு எப்போதும் உண்டு” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலியின் அந்தரங்க வீடியோவை பதிவு செய்தவர் மர்ம மரணம்.. போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!