சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'மதராஸி' திரைப்படம், விமர்சன ரீதியாக கலவையான கருத்துகளை பெற்றிருந்தாலும், வசூல்ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
'மதராஸி' படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போதே, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தனது அடுத்த படத்தின் கதைக்கரு ஒன்றை சிவகார்த்திகேயனிடம் பகிர்ந்துகொண்டதாகவும், அது நடிகர் சிவகார்த்திகேயனுக்குப் பிடித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் கதையும் ஒரு அதிரடி ஆக்சன் கதை என்றும், ஆரம்பம் முதல் முடிவு வரை இந்த படத்தில் ஆக்சன் இருக்கும் என்றும், அதுமட்டுமின்றி ஒரே இரவில் நடைபெறும் கதை என்பதால் இதில் ரொமான்ஸ், டூயட் எல்லாம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
'மதராஸி' திரைப்படம் வணிகரீதியில் வெற்றி பெற்றுள்ளதால், இந்த கூட்டணி விரைவில் அடுத்த புதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.