Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித் - ஆதிக் கூட்டணியின் அடுத்த படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் தான் கிடைக்குமா?

Advertiesment
அஜித்

Siva

, செவ்வாய், 16 செப்டம்பர் 2025 (18:39 IST)
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ள புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. எனினும், இந்த படத்தின் கதைக்களம் துறைமுக பின்னணியில் அமைந்திருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
இதற்கு முன்னர், அஜித் நடித்த 'அட்டகாசம்' போன்ற படங்களில் அவர் துறைமுக காட்சிகளில் தோன்றியிருப்பதால், அவருக்கு இந்த வகை பின்னணி கதைக்களங்கள் மீது ஆர்வம் இருக்கலாம் என கூறப்படுகிறது.
 
ஆனால் அதே நேரத்தில் சினிமா வட்டாரங்களில் பரவி வரும் மற்றொரு முக்கியமான செய்தி, மத்திய அரசின் புதிய சென்சார் விதிமுறைகள் பற்றியது. இந்த புதிய விதிமுறைகளின்படி, அரசு நிறுவனங்களான துறைமுகம், விமான நிலையம், மற்றும் காவல் நிலையங்கள் போன்றவற்றை திரையில் எதிர்மறையாக சித்திரித்தால், அந்த படங்களுக்கு 'ஏ' சான்றிதழ் அளிக்கப்படலாம் அல்லது அனுமதி மறுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த விதிமுறை அமலுக்கு வந்தால், சமூக பிரச்சினைகளை மையமாக கொண்டு கதை எழுதும் இயக்குநர்களுக்கு இது ஒரு பெரும் சவாலாக அமையும் என கூறப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’மதராஸி’ ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா? ஆர்வத்துடன் காத்திருக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்..!