Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சமூகவலைதளங்களில் இருந்து வெளியேறிய லோகேஷ்…. இதுதான் காரணமா?

சமூகவலைதளங்களில் இருந்து வெளியேறிய லோகேஷ்…. இதுதான் காரணமா?
, செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (15:13 IST)
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் சமூகவலைதளங்களில் இருந்து தற்காலிகமாக வெளியேறுவதாக அறிவித்தார்.

மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அதன்பின் அவர் இயக்கிய கைதி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார். இந்த நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ரூ 400 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்ததாக விஜய் நடிக்கும் தளபதி 67 என்ற திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.  இந்நிலையில் திடீரென டுவிட்டரில் இருந்து தற்காலிகமாக விலகுவதாகவும், அடுத்தபட அறிவிப்பின்போது மீண்டும் வருவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் லோகேஷ் வெளியேற மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. திரையுலகைச் சேர்ந்த பலர் லோகேஷை அணுகி தங்கள் படங்களுக்கான டீசர் வெளியீடு, முதல் லுக் வெளியீடு போன்ற புரமோஷன் பணிகளை செய்ய சொல்வதால் அந்த அன்புத்தொல்லைகளில் இருந்து தப்பதான் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சந்தானத்தின் அடுத்த பட தயாரிப்பாளர் இவரா? வெளியான தகவல்