Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''விஜய்67'' படத்தின் கதை இதுவா? லோகேஷ் கனகராஜின் பிளான் என்ன?

''விஜய்67'' படத்தின் கதை இதுவா? லோகேஷ் கனகராஜின் பிளான் என்ன?
, சனி, 6 ஆகஸ்ட் 2022 (20:02 IST)
நடிகர் விஜய் அடுத்து நடிக்கவுள்ள விஜய்67 படத்தின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

இப்படத்தை அடுத்து, விஜய் நடிக்கவுள்ள படம் விஜய்67. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின், லோகேஷ் – விஜய் இணையவுள்ள படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் வேலைகளைத் தொடங்கியுள்ளதால், சமூக வலைதளத்தில் இருந்து தற்காலிகமாக விலகவுள்ளதாக லோகேஷ் தெரிவித்தார்.

இந்த நிலையில்,ஏ.ஏல். விஜய் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான தலைவா படத்திற்குப் பின் நடிகர் விஜய்  மும்பை கேங்ஸ்டர் கதையில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதற்காத இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது மும்பை சென்றுள்ளதாகவும், இப்படத்தில் வில்லன் கேரக்டர்களுக்கு பிரித்விராஜ், சஞ்சத் தத் என 6 பேர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இப்படம் பான் இந்திய படமாக ரிலீஸாகும் எனக் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''சீதா ராமம்'' படத்தை மிஸ் செய்த விஜய் பட நடிகை