கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் தளபதி 67 படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன
விக்ரம் படத்தில் கமல்ஹாசனின் மகளாக நடித்தவர் நடிகை சுவஸ்திகா கிருஷ்ணன். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து அதில் தளபதி 67 என்ற ஹேஷ்டேக்கையும் பதிவு செய்துள்ளார்
இதனை அடுத்து அவர் தளபதி 67 படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்பது தெரியவருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் சமந்தா மற்றும் த்ரிஷா ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது சுவஸ்திகா கிருஷ்ணனும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது
இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவந்தால் மட்டுமே உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகயிருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.