Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னய்யா நடக்குது? வாட்டர்மெலன் திவாகர் மீது காதலில் விழுந்த அரோரா! அதிர்ச்சியில் ஆடியன்ஸ்!

Advertiesment
Watermelon star arora love

Prasanth K

, திங்கள், 13 அக்டோபர் 2025 (13:37 IST)

பிக்பாஸ் வீட்டில் புதிதாக முளைத்திருக்கும் காதல் கதை ஆடியன்ஸையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9ன் முதல் வாரம் முடிந்துள்ள நிலையில் ப்ரவீன் காந்தி எவிக்‌ஷன் ஆகியுள்ளார். ஆனால் ப்ரவீன் காந்தி வீட்டிற்குள் இருந்தபோது, நல்ல கண்டெண்ட் செய்ய வேண்டுமென்றால் நாம் இருவரும் காதலிப்போம் என அரோராவிடம் பேசியது வைரலானது.

 

ஆனால் ப்ரவீன் காந்தி சென்ற பிறகு இந்த ஐடியா வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரோடு செட் ஆகியிருப்பதாக தெரிகிறது. முதல் வாரம் முழுக்க வாட்டர்மெலன் ஸ்டாரோடு ‘அண்ணன்.. அண்ணன்’ என சுற்றிக் கொண்டிருந்த விஜே பார்வதி தற்போது விலகி செல்ல ஆரம்பித்துள்ள நிலையில் அரோராவுடன் திவாகருக்கு நெருக்கம் அதிகமாகியுள்ளது.

 

அரோராவின் மடியில் திவாகர் படுத்துக் கொள்வது, அரோராவை தனது ஆள் என திவாகர் சொல்வது என பிக்பாஸ் வீடே இந்த இளசுகளின் லவுஸால் அல்லோலப்படுகிறது. எப்படி இருந்தாலும் இது எல்லாமே கடைசியாக பொழுதுபோக்கு கண்டெண்ட் உருவாக்கும் முயற்சிதான் என பேசிக் கொள்ளப்படுகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி.. வெளியேறிய ப்ரவீன் காந்தி! - இனிமேல்தான் இருக்கு ஆட்டமே! Biggboss Tamil Season 9