விஜய் டிவியில் ஒளிபரப்பான தெருநாய் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் நடிகை அம்மு பேசிய சில கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அவரது பேச்சுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில், தான் பேசியது தவறாகபுரிந்துகொள்ளப்பட்டது என்று அவர் ஒரு வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், விரைவில் தொடங்கவிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனில் அம்மு ஒரு போட்டியாளராக கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக, தொலைக்காட்சி நிர்வாகம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்தத் தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. அம்மு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வாரா? அப்படியே கலந்துகொண்டாலும் அந்த நிகழ்ச்சியிலும் நாய்கள் குறித்து பேசுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.