Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இம்புட்டு அழகா நீங்க... ஒரிஜினல் அழகை காட்டி வீடியோ வெளியிட்ட ரம்யா!

இம்புட்டு அழகா நீங்க... ஒரிஜினல் அழகை காட்டி வீடியோ வெளியிட்ட ரம்யா!
, செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (15:31 IST)
தொலைக்காட்சி  நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்ற தொகுப்பாளினி ரம்யாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு இடம் உள்ளது.  
 
ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாது "ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன்" ஆகிய படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா தற்போது கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
 
2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்துகொண்ட ரம்யா பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பிய  ரம்யா அடுத்தடுத்து படங்களில் நடிப்பது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என படு பிஸியாக வலம் வருகிறார்.
 
சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் ரம்யா தற்போது உடல் எடையை குறைத்து சிக்கென மாறிவிட்டார். இந்நிலையில் தற்போது மேக்கப் போடாமல் இருக்கும் தனது ஒரிஜினல் அழகை காட்டி வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொல மாஸ்... இணையத்தை தெறிக்கவிட்ட "பீஸ்ட்" புதிய ட்ரைலர்!