மௌனகுரு படத்துக்கு பிறகு சாந்தகுமார் 8 ஆண்டுகள் கழித்து இயக்கியப் படம் என்பதால் மகாமுனி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் ரிலிஸான போது அதன் திரைக்கதை தொய்வு காரணமாக மிகப்பெரிய வெற்றி பெறவில்லை. ஆனால் ரிலிஸுக்கு பின்னர் படக்குழு பல விருது விழாக்களில் விருது வென்றது.
இந்நிலையில் சாந்தகுமார் அடுத்த படமாக ரசவாதி வெளியானது. அர்ஜுன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் ஜி எம் சுந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகிக் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் திரையரங்கில் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இந்நிலையில் இப்போது சாந்தகுமார் தன்னுடைய அடுத்த படத்துக்கான வேலைகளை தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் அவர் விக்ரம்மை நடிக்க வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக சமீபத்தில் அவர் விக்ரம்மை சந்தித்து கதைக் கூறியதாகவும், அதற்கு விக்ரம் சம்மதித்ததாகவும் சொல்லப்படுகிறது. விக்ரம் தற்போது வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்ததும், அவர் சாந்தகுமார் இயக்கத்தில் நடிப்பார் என சொல்லபடுகிறது.