Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

"ரசவாதி" திரைப்படத்தின் முன்வெளியீடு நிகழ்வு!

Advertiesment

J.Durai

, புதன், 8 மே 2024 (10:18 IST)
டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி & சரஸ்வதி சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் 'ரசவாதி'. மே 10 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் ப்ரீ- ரிலீஸ்  நடைபெற்றது.
 
இந் நிகழ்வினில்  நடிகை தீபா பேசியது ....
 
படத்தில் எனக்கு அருமையான கதாபாத்திரம் கொடுத்த இயக்குநருக்கு நன்றி". 
 
நடிகை ரேஷ்மா பேசியது ...
 
நான் இந்த மேடைக்கு வர காரணமாயிருக்கும் என் அம்மா, அப்பாவுக்கு நன்றி. படத்தில் உடன் பணிபுரிந்த நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்". 
 
நடிகர் சுஜித் பேசியது ....
 
சில இயக்குநர்கள் தங்களுக்குப் பிடித்த சேஃப் ஜானரிலேயே படம் எடுக்க விரும்புவார்கள். ஆனால், சாந்தகுமார் சார் அதை உடைக்க விரும்பி 'ரசவாதி' படம் எடுத்திருக்கிறார். படம் உங்களுக்குப் பிடித்தபடி வந்திருக்கிறது என்று நம்புகிறேன்". 
 
நடிகை தான்யா ரவிச்சந்திரன் பேசியது .....
 
இந்த வாய்ப்பு கொடுத்த சாந்தகுமார் சாருக்கு நன்றி. உடன் நடித்த அர்ஜூன் தாஸ் மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் நன்றி. இதில் என் கதாபாத்திர பெயர் சூர்யா. இதற்கு முன்பு நான் நடித்திருந்த படங்களில் இருந்து இந்த கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்கும்" என்றார். 
 
நடிகர் அர்ஜூன் தாஸ் பேசியது .....
 
 இதற்கு முன்பு பேசிய எல்லோருமே அவர்கள் கதாபாத்திரத்திற்காக நன்றி சொன்னார்கள். அதுபோலதான் எனக்கும் சூப்பரான கதாபாத்திரம். கோவாவில் படப்பிடிப்பில் இருந்தபோது என்னை சாந்தகுமார் சார் அழைத்தார். அவர் என்னை தாஸ் என்றுதான் கூப்பிடுவார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம்,
என அனைத்து மொழிகளிலும் இந்த படம் வெளியாக இருக்கிறது. சாந்தகுமார் சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அது இந்த படத்தின் மூலம் நிறைவேறியது மகிழ்ச்சி. மே 10 அன்று படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைக் கொடுங்கள்" என்றார். 
 
இயக்குநர் சாந்தகுமார் பேசியது .....
 
என்னுடைய படம் சிறப்பாக உள்ளது என்று நீங்கள் சொன்னால் அதற்கு முக்கிய காரணம் என்னுடைய குழு தான். நடிகர்கள், தொழில்நுட்ப குழுவை சேர்ந்தவர்கள், பப்ளிசிட்டி என எல்லாருமே தங்கள் சிறந்த உழைப்பை கொடுத்துள்ளனர். 'ரசவாதி' சிறப்பாக வந்துள்ளது. 'மகாமுனி', 'மெளனகுரு' படத்திற்கு அடுத்தபடியாக இந்தப் படம் வேறொரு அனுபவத்தை உங்களுக்குக் கொடுக்கும். படம் மே 10 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு! பயன்படுத்தியவர்களின் நிலை என்ன?