மௌனகுரு படத்துக்கு பிறகு சாந்தகுமார் 8 ஆண்டுகள் கழித்து இயக்கியப் படம் என்பதால் மகாமுனி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் ரிலிஸான போது அதன் திரைக்கதை தொய்வு காரணமாக மிகப்பெரிய வெற்றி பெறவில்லை. ஆனால் ரிலிஸுக்கு பின்னர் படக்குழு பல விருது விழாக்களில் விருது வென்றது.
இந்நிலையில் இப்போது சாந்தகுமார் அடுத்து இயக்கும் படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன் மற்றும் ஜி எம் சுந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் தற்போது அந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. சாந்தகுமார் படங்களில் வழக்கமாக இடம்பெறுவது போன்ற அழகான நிலவியல் காட்சிகள் ஆன்மிக உணர்வைத் தருகின்றன. அதே போல வசனங்களும் இசையும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
இந்த படம் மே 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகாமுனி படத்துக்குப் பிறகு இந்த படம் சாந்தகுமாருக்கு ஒரு கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.