Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மூன்று நாட்களில் 1.3 கோடி ரூபாய் வசூல்… கலக்கும் கேப்டன் பிரபாகரன்!

Advertiesment
விஜயகாந்த்

vinoth

, திங்கள், 25 ஆகஸ்ட் 2025 (09:45 IST)
தமிழ் சினிமா ஆக்‌ஷன் படப் பிரியர்களுக்கு திகட்ட திகட்ட விருந்து வைத்தவர் விஜயகாந்த். 80 களிலும் 90 களிலும் வெளியான அவரின் ஆக்‌ஷன் படங்கள் இன்றளவும் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி ஆகியவற்றில் பார்க்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றன.

அப்படி விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் மைல்கல்லாக அமைந்த படம்தான் அவரின் நூறாவது படமான ‘கேப்டன் பிரபாகரன்’. 1992 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அதுவரையிலான அவரின் வெற்றிகளை எல்லாம் தகர்த்தெறிந்து புதிய பென்ச்மார்க்கை உருவாக்கியது. ஆர் கே செல்வமணி இயக்கத்தில், விஜயகாந்த், சரத்குமார் மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் நடிப்பில் உருவான இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். விஜயகாந்த் மற்றும் இப்ராஹிம் ராவுத்தர் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர்.

இந்த படத்தில் பணியாற்றிய விஜயகாந்த் மற்றும் இப்ராஹிம் ராவுத்தர் ஆகிய இருவரும் மறைந்துவிட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை புதுப்பொலிவுடன் ரிலீஸானது. இந்நிலையில் இந்த படத்துக்கு ரசிகர்களிடம் இருந்து அபரிமிதமான வரவேற்புக் கிடைத்து வருகிறது. முதல் மூன்று நாட்களில் மட்டும் இந்த படம் தமிழ்நாட்டில் சுமார் 1.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரு ரி ரிலீஸ் படத்துக்கு இந்த வசூல் திருப்தியளிக்கக் கூடியது என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’ஜனநாயகன்’ படத்தில் அட்லி, லோகேஷ், நெல்சன்.. புஸ்ஸி ஆனந்துக்கும் ஒரு கேரக்டர்..!