மதுரை மாநாட்டில் விஜயகாந்த் குறித்து விஜய் பேசியது வைரலான நிலையில் அதுகுறித்த சீமானின் விமர்சனத்தை பிரேமலதாவும் ஆட்சேபித்துள்ளார்.
மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசிய விஜய், தனது உரையில் அண்ணா, எம்ஜிஆர், விஜயகாந்த் என பலரை குறிப்பிட்டு பேசினார். முக்கியமாக விஜயகாந்தை அண்ணன் அண்ணன் எனக் கூறி பேசினார். ஆனால் மதுரை மக்களுக்கு விஜயகாந்த் நெருக்கமானவர் என்பதால் அவரது பெயரை சொல்லி விஜய் அரசியல் செய்ய முயல்வதாக பலரும் விமர்சித்தனர்.
விஜய்யின் மதுரை மாநாடு குறித்து சீமான் பேசியபோது “விஜயகாந்த் உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது விஜய் அவரது கட்சிக்கு ஆதரவாக பேசவோ, அவரை சந்திக்கவோ இல்லை. இப்போதும் விஜய் என் கருத்துக்கு வாக்களியுங்கள் என சொல்லவில்லை. என் முகத்துக்காக ஓட்டு போடுங்கள் என்றுதான் சொல்கிறார்” என விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் சீமானின் கருத்துகளோடு ஒன்றி போவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். இதுபற்றி பேசிய அவர் “உலகம் அறிந்த சீமான் உண்மையை உரக்க சொல்லியிருக்கிறார். தலைவர் விஜயகாந்த் உடல்நலமில்லாமல் இருந்தபோது ஒருமுறை கூட விஜய் வந்து அவரை சந்திக்கவில்லை. ஆனால் இறந்த பிறகு வந்தார். இது பற்றி நானே அவரிடம் நேரில் கேட்பேன்” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K