Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’ஜனநாயகன்’ படத்தில் அட்லி, லோகேஷ், நெல்சன்.. புஸ்ஸி ஆனந்துக்கும் ஒரு கேரக்டர்..!

Advertiesment
Vijay

Siva

, ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2025 (10:54 IST)
நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகும் 'ஜன நாயகன்' திரைப்படத்தில், தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்-யின் 69வது படமான ‘ஜன நாயகன்’, சமூக பிரச்சினைகளைப் பேசும் அதிரடி திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
 
இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் கிளிம்ஸ் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
 
இந்த படத்தில் புஸ்ஸி ஆனந்த் ஒரு அரசியல் தலைவராக நடித்துள்ளதாகவும், இயக்குநர்களான அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் பத்திரிகையாளர்களாக சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இது விஜய்யின் கடைசித் திரைப்படம் என்பதால், அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் பலரும் இதில் சிறப்பு தோற்றங்களில் நடித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. ரசிகர்களிடையே இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சில சந்திப்புகள் காலத்தால் அழியாதவை.. ரஜினியை சந்தித்த பின் சிம்ரன் பதிவு..!