எனக்கும் பாண்டிராஜுக்கும் முட்டல் மோதல் இருந்தது உண்மைதான்… விஜய் சேதுபதி பகிர்வு!

vinoth
செவ்வாய், 15 ஜூலை 2025 (11:11 IST)
எதற்கும் துணிந்தவன் படத்தின் தோல்விக்குப் பிறகு 3 ஆண்டுகள் கழித்து பாண்டிராஜ் தற்போது ‘தலைவன் தலைவி’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க குணச்சித்திர வேடங்களில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தில் யோகி பாபு மற்றும் சரவணன் உள்ளிட்டவர்கள் மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடிக்கிறார். இதுவரை வெளியான முன்னோட்டம் மற்றும் முதல் தனிப்பாடல் ஆகியவை கவனத்தை ஈர்த்துள்ளன. படம் ஜூலை 25 ஆம் தேதி ரிலீஸாகிறது. இதையொட்டி நடந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர்.

அப்போது பேசிய விஜய் சேதுபதி “இந்த படம் தொடங்கும்போது எனக்கும் இயக்குனர் பாண்டிராஜுக்கும் சிறு சிறு முட்டல் மோதல் இருந்தது உண்மைதான். ஆனால் எல்லாம் சரியாகிவிட்டது. நல்ல உறவில் இதுபோன்ற சின்ன சின்ன சண்டைகளும் அழகுதானே” எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆச்சு! அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை லாக் செய்த சிவகார்த்திகேயன்

சேலையில் ஜொலிக்கும் க்ரீத்தி … அழகிய புகைப்படத் தொகுப்பு!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் அசத்தும் ராஷி கண்ணா!

மாஸ்க் படத்துக்கு இன்னும் ஜி வி க்கு சம்பளம் தரவில்லை… வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!

இயக்குனர் பாரதி கண்ணனை மிரட்டினார்களா கார்த்திக்கின் ரசிகர்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments