ஜெயிலர் 2’வில் இணைந்த முக்கிய நடிகர்.. ரஜினிக்கு வில்லனா ஏற்கனவே ஹிட்டடித்த காம்போ

Bala
புதன், 26 நவம்பர் 2025 (16:41 IST)
ரஜினி தற்போது ஜெயிலர் 2 வில் நடித்துவருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே ரஜினி நடிப்பில் வேட்டையன், கூலி போன்ற திரைப்படங்கள் வசூலில் எதிர்பார்த்த அளவு எட்டமுடியவில்லை. அதனால் இந்தப் படத்தை மிகவும் கவனமாக கையாண்டு வருகிறார்கள். இதன் முதல் பாகம் பெரிய அளவில் வசூலில் சாதனை படைத்தது.
 
மீண்டும் அப்படியொரு முயற்சியில்தான் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த படம் அடுத்தாண்டு ஜுன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்துடன் ஜெயிலர் 2 படத்தில் ஷாரூக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது. அதுமட்டுமில்லாமல் மற்ற பல நட்சத்திரங்களும் இந்தப் படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியானது.
 
படத்தை நெல்சன் இயக்க எப்பவும் போல அனிருத் தான் இந்தப் படத்திற்கும் இசை. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைதயாரிக்கிறார்கள். முதல் பாகம் மாபெரும் வெற்றியடைந்ததோடு இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு அதிகளவிலேயே இருக்கிறது.இந்த நிலையில் ஜெயிலர் 2 படத்தில் மேலும் ஒரு முக்கிய நடிகர் நடிக்கிறார் என்ற ஒரு செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது.
 
அதாவது ஜெயிலர் 2 படத்திலும் விஜய்சேதுபதி நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அரசன் படத்திலும் விஜய்சேதுபதிதான் வில்லன். அதே போல் ஜெயிலர் 2 படத்திலும் வில்லனாக விஜய்சேதுபதி நடிப்பார் என்று கூறப்படுகிறது.  பேட்ட படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினியும் விஜய்சேதுபதியும் ஜெயிலர் 2 படத்தில் நேருக்கு நேர் சந்திக்கிறார்கள். 
 
சொல்லப்போனால் ஒரு ஹீரோவாக இருந்து வில்லனாக விஜய்சேதுபதி மாறியதே பேட்ட திரைப்படத்தில் இருந்துதான். தன்னுடைய முதல் வில்லன் கதாபாத்திரத்தை ரஜினிக்கு எதிராக இருந்துதான் ஆரம்பித்தார்.இப்போதும் ரஜினிக்கு வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதி - பிரஜின் இடையில் வெடித்த வாக்குவாதம்! பின்னணி என்ன?

பட புரோமோஷனுக்காக என்னெல்லாம் பண்ண வேண்டியிருக்கு? பிக்பாஸ் வீட்டில் கீர்த்தியின் மைண்ட் வாய்ஸ்

‘கார்த்திகை தீபம்’ தொடரில் இணைந்த விஜய் பட நடிகை.. காவல்துறை அதிகாரி கேரக்டரா?

எத்தனையோ வெற்றிகளைக் கொடுத்திருந்தாலும் அந்த தோல்வி என்னைப் பாதித்தது – ரகுல் ப்ரீத் வருத்தம்!

ஜனநாயகன் படத்தில் நடிக்க எவ்வளவோ முயற்சி செய்தேன்… நடக்கவில்லை – பிரபல நடிகர் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments