கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கப் போகிறார் என்று சமீப காலமாக ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. முதலில் அந்த படத்தை சுந்தர் சி இயக்குவதாக இருந்தது. அதன் பிறகு திடீரென சுந்தர் சி அந்த படத்தில் இருந்து விலகினார். அதற்கான உண்மையான காரணம் என்ன என்பது பற்றி பல விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால் சுந்தர் சி அந்த படத்திற்காக கொஞ்சம் நாட்கள் அவகாசம் கேட்டதாகவும் கமல் தரப்பிலிருந்து மூன்று மாதத்திற்குள் இந்த படத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று சொன்னதாகவும் அதன் பிறகு சுந்தர் சி அந்த படத்தில் இருந்து விலகினார் என கூறப்பட்டது. ஏனெனில் சுந்தர் சிக்கு ஏற்கனவே ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஒரு படமும் விஷால் வைத்து ஒரு படமும் என கைவசம் இரண்டு படங்கள் இருந்த நிலையில் கமல் சொன்ன அந்த மூன்று மாத காலத்திற்குள் ரஜினி படத்தை இயக்க முடியாமல் போனதாக தெரிகிறது.
இந்த நிலையில் ரஜினியின் இந்த படத்தை அடுத்து யார் இயக்கப் போகிறார் என்ற ஒரு எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்தன. பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டது. இதில் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் மற்றும் மகாராஜா படத்தின் இயக்குனர் நித்திலன் சாமிநாதன் போன்றவர்களின் பெயர்கள் லிஸ்ட்டில் இருந்தன. ஆனால் கடைசியாக கமல் தயாரிக்கும் இந்த படத்தை பார்க்கின் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் இயக்கப் போகிறார் என கிட்டத்தட்ட முடிவாகி இருப்பதாக தெரிகிறது.
இந்த படத்திற்காக ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு 10 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. அவருடைய முதல் படமான பார்க்கிங் படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் 6 லட்சம். அடுத்ததாக சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் .அந்த படத்திற்காக அவருக்கு சம்பளம் 2 கோடி என பேசப்பட்டிருக்கிறது. ஆனால் ரஜினி படத்திற்கு அவருக்கு 10 கோடி சம்பளம் என்று தெரிகிறது.
இதுதான் உண்மையான வளர்ச்சி என கோடம்பாக்கத்தில் பேசி வருகிறார்கள். என்னதான் அறிமுக இயக்குனர்களாக இருந்தாலும் ரஜினி படம் எனும் போது மார்கெட் , வியாபாரம் என டெக்னீசியன்களின் மார்கெட்டும் உயர்ந்து விடுகிறது.