நடிகர் விஜய் நடித்த கடைசி திரைப்படமான ஜனநாயகன் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதே தேதியில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆரம்பத்தில், 'பராசக்தி' படத்தின் தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக அதன் வெளியீடு தள்ளிப்போகலாம் என கூறப்பட்டது. ஆனால், தற்போது படப்பிடிப்பு மீண்டும் தொடங்கிவிட்டதால், பொங்கலுக்கு பராசக்தி கட்டாயம் வெளியாக வேண்டும் என தயாரிப்பு தரப்பு உறுதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், ஜனநாயகன் படத்துடன் 'பராசக்தி' படமோதவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் நிலையில், சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' திரைப்படம் ஜனவரி 14 ஆம் தேதி தான் ரிலீஸாகவுள்ளது.
இதனால், ஜனவரி 9 முதல் 13 ஆம் தேதி வரை ஜனநாயகன் படம் வசூலை குவித்துவிடும் என்றும், அதற்கு பிறகுதான் 'பராசக்தி' வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. எனவே, ஜனநாயகன் மற்றும் 'பராசக்தி' ஆகிய இரண்டு பொங்கல் ரிலீஸ் படங்களாக இருந்தாலும் ஒரே நாளில் மோத போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.