தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர் கூட்டம் நாளை மறுநாள் பனையூரில் நடக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலை குறி வைத்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக இயங்கி வருகிறது. மாநாடு, பூத் கமிட்டி மாநாடு, செயற்குழு கூட்டம் என அடுத்தடுத்து நகர்வுகளை செய்து வருகிறது தவெக. இதன் அடுத்தக் கட்டமாக மதுரையில் மாநாடு நடத்தப்போவதாக தவெக அறிவித்துள்ளது.
இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தில் ஒரு கோடி தொண்டர்களை இணைப்பதை டார்கெட்டாக கொண்டு தவெகவினர் செயல்பட்டு வருகின்றனர். அதற்கு உதவும் வகையில் தவெக மொபைல் செயலி ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நாளை மறுநாள் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பனையூரில் விஜய் தலைமையில் நடக்கிறது.
இதில் விஜய் தவெக செயலியை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று தவெகவில் இணைக்கும் பணியை நிர்வாகிகள் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவுறுத்தல்களை அளிக்கதான் நாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை விஜய் அழைத்துள்ளதாக தகவல்.
Edit by Prasanth.K