Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லியோ படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம்… லேட்டஸ்ட் அப்டேட்!

லியோ படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம்… லேட்டஸ்ட் அப்டேட்!
, திங்கள், 5 ஜூன் 2023 (10:00 IST)
மாஸ்டர் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும்
லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

படத்தின் முக்கியக் காட்சிகளைக் காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் படமாக்கி சென்னை திரும்பியது படக்குழு. இதையடுத்து சென்னையில் அடுத்த கட்ட ஷுட்டிங் தொடங்கி நடந்து வருகிறது. ஜூன் மாத இறுதியில் மொத்த ஷூட்டிங்கும் முடியும் என தெரிகிறது.

ஏற்கனவே படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 19 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது படத்தின் வியாபாரத்தை லலித் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. லியோ படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையையும் பார்ஸ் பிலிம்ஸ்(Phars films) என்ற நிறுவனம் மிகப்பெரும் தொகைக்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவுக்கு திருமணம்?... மாப்பிள்ளை யார் தெரியுமா?