கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 96. ரிலிஸுக்கு முன்னர் பல சிக்கல்களைக் கடந்து திரையரங்குகளுக்கு வந்த 96 படம், ரிலிசுக்குப் பின் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றது. காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட படமான 96 படம் வழக்கம்போல இளைஞர்களை மட்டும் கவராமல் கல்யாணம் ஆகி தனது மத்திய வயதுகளில் இருக்கும் 70ஸ் மற்றும் 80ஸ் கிட்ஸ்களையும் கவர்ந்தது. விஜய் சேதுபதி மற்றும் திரிஷா கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இதையடுத்து இதே படத்தை பிரேம்குமார் தெலுங்கில் ரீமேக் செய்தார். அதில் சமந்தாவும் ஷர்வானந்தும் நடித்திருந்தார்கள். ஆனால் தமிழில் பெற்ற வெற்றியை அந்த படம் பெறவில்லை.
அதையடுத்து பிரேம் குமார் அடுத்து கார்த்தி நடிப்பில் ஒரு படத்தை இயக்க சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆக்ஷன் படமாக உருவாகும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அரவிந்த்சாமி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தற்போது தகவல்கள் பரவி வருகின்றன.