பிரபல நகைச்சுவை நடிகரான ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா. இவர் விஜய் நடித்த பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்திருந்தார். அந்த படத்தில் அவரின் கதாபாத்திரம் பரவலான கவனத்தைப் பெற்றது.
இதையடுத்து தொடர்ந்து படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இந்திரஜா, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருந்து ரீல்ஸ்களை பகிர்ந்து வைரல் ஆகி வருகிறார்.
இந்நிலையில் இப்போது அவருக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. இன்ஸ்டாவில் ஆண் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை அவர் பகிர, ரசிகர்கள் இவர்தான் நீங்கள் திருமணம் செய்யப்போகும் நபரா எனக் கேட்க “ஆம் விரைவில் திருமண்ம். அதை அறிவிப்பேன்” எனக் கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துமழை பொழிந்து வருகின்றனர்.